செவ்வாய், 22 ஏப்ரல், 2014

மாப்பிள்ளை வாரார்......



 மேலப்பாளையத்தில் ஒரு எம்பது வருஷத்துக்கு முந்தி பொண்ணு வீட்டுக்கு, மாப்பிளையா வந்தவங்க எப்படி வந்தாங்கன்னு தெரியுமா?.....பல பெருசுங்க என்கிட்டே கேட்டுருக்காங்க.
"நாங்க அப்போ பொறக்கல்லியே...அப்புறம் எப்படித்தெரியும்?" பதில் சொல்லுவேன்.

"அத ஏண்டா கேக்கே?.... குதிரையில் தியாக ராஜ பாகவதர் முளிப்பில் தலையில் தலைப்பா "பேட்டா"  கட்டி....  அந்தக்  கதைகள கேட்டால் ரொம்ப சிரிப்பானிக் கொத்தா தான் இருக்கும்".....என்று பிகு பண்ணிக்கிட்டே சொல்ற வயசாளிங்க நிறைய பேர் இருந்தாங்க.....இப்போ அவங்களும் குறைஞ்சே போய்ட்டாங்க.

அதப்பத்தி தனியாதான் எழுதணும்....பார்ப்போம்.என்ன செய்ய?  இந்த வாரம்.நேரம் இல்லையே..

ஒரு இருபது வருஷத்துக்கு முந்தி வரை மேலப்பாளையத்தில் ...மாப்பி ளை நிக்காஹ் முடிக்க பொன் வீட்டுக்கு மாலையும் கழுத்துமா.... திறந்த காரில் பட்டினப்பிரவேசம் போவதென்பது ரொம்ப தடபுடலா இருக்கும்....வசதி வாய்ப்பைப் பொருத்து கார்களின் முழிப்பு இருக்கும்...

1975 க்கு முந்தி வரை பெரும்பாலும் "ராக்"  கல்யாணம் தான்.அப்படி வார மாப்பிளகளின் "முக வாகு" தெரிய பெட்ரோமாக்ஸ் விளக்குகள் நிறைய பிடித்தார்கள்...அப்புறம் சோடனைக் கார்கள் விளக்குகள் எல்லாம் போட்டு வந்தது....

அதுக்கப்புறம் பகல் வெளிச்சத்தில் திறந்த ஜீப்பில் அலங்கரிக்கப்பட்ட ரத அமைப்பில்,  மாப்பிளைகள் வந்தார்கள்..

ரொம்பக் கம்ம்மியா முடிக்கனும்ன்னு ஆசைப்பட்டு சில புரோக்கர்கள் மண்ணெண்ணையில் ஓடுகிற கார்களையும் பிடிச்சிக் கொண்டு வருவதுண்டு...பொண்ணு வீட்டுத்தெருவில் அப்படியாப்பட்ட  அந்தப்பாடாவதி வண்டிகள் நின்னுபோனதைப் பார்த்து சிரித்துக் கொண்டே அழுத மாப்பிளைகள் உண்டு...." இந்த வண்டியைப் பிடிச்சிக் கொண்டு வந்தவன் விளங்குவானால?"....மாப்பிளைகள் சிலர் சாபமும் கொடுப்பார்கள்....

மாப்பிளக் கார்,  பொண்ணு வீட்டுத்தெருவுக்கு வரும் போது, அதப்பார்க்கிற  ரன்ண்டு செறகு ஆட்களுக்கும் பீடா கண்டிப்பா வெளம்புவாங்க.....சிலர் ஆள் பார்த்து ஸ்பெஷல் பீடாவெல்லாம் கொடுப்பதுண்டு.

பெருசுகளுக்கு "செபத்தையா நாயிடு" சுருட்டு, ஆதியில் வந்த ஆதம் பீடி முதலானதுகள் கொடுப்பார்கள்...

கொஞ்சம்உஷார்பார்ட்டிகளுக்கு 'சார்மினார்','சிசர்ஸ் ','பாசிங்ஷோ' சிகரெட் விநியோகமும் கிடைக்கும்.

பெரும்பாலும் மாப்பிளை ஊர்வலத்தில் கொடுக்கிற பீடி சிகரெட் வகையறாவை கொண்டே முதலாவதாக புகைவிட்டு பார்த்தவர்கள் நிறைய  உண்டு...

மாப்பிளை ஊர்வலத்துக்கு முன்பாக மீசிக் குரூப் பேன்ட் வாத்தியக் கச்சேரிகள் நடத்துவார்கள்....சில பழைய காலத்து ஆட்கள் வீட்டில் நாதஸ்வரம் தவில் கச்சேரிகள் நடக்கும்....

எம்.ஜி.ஆர்.சிவாஜி பாட்டுக்கள் அப்போ ரொம்ப "பேமஸ்". .
படிக்கிற பாட்ட வச்சே, மாப்பிளை எம்.ஜி.ஆர்.ஆள் அல்லது சிவாஜி ஆள்ன்னு சொல்லிப் புடலாம்..

சில கிருத்தியம் புடிச்ச 'மாப்பிளையை பெத்ததுகள்'.... "பாகவதர் பாட்டப் போடச்சொல்லுலே"அப்படீன்னு சொல்வதுண்டு. 

இந்தமாப்பிளைகளை, ஏன் பொண்ணு வீட்டு தெருல இம்புட்டு மெதுவா கூப்பிட்டு போராக?.....நான் நிறைய பேர்கிட்ட கேட்டுருக்கேன்....எல்லாரும் மாப்பிளைய நல்லா பார்க்கத்தான் என்பார்கள் பொதுவா.

சேப்ள அலி பெத்தாப்பா இப்படித்தான் சொன்னார்      .

"வே.....பேரப்புள்ள....ராத்திரி இருட்டினப்பொறகு தான்வே அந்தக் கால மாப்பிளைகள் பொன் வீட்டுக்கு வருவாக.....பட்டப்பகல்ல விருந்துக்கு மட்டும் தான் வரணும்...அப்படி வரும் போது சொக்காரங்களோடு வந்தால் தான் அக்கம் பக்கம் பார்த்து மெச்சிக்கிடுவாங்க"

.... எங்க லெப்பார்மாமா வேற விதமா அத சொல்லிருக்கார்..."அடே......ரா வேளையில..இருட்டுல எங்க ...யார் வரா? போறான்னு?....  கண்டு பிடிக்கது ரொம்ப கஷ்ட்டம்...அதான் இன்னார் வீட்டுக்கு..... சாத்தாப்பிளை மாப்பிளையா வாரான்..அவன நல்லாப்..... பார்த்துக் கிடுங்க.....ஒன்னடக்க ஒன்ன செய்துராதீங்க......சாமங்கீமத்துக்கு பொண்ணு வீட்டுக்கு அவன் வருவான் போவாங்க்ரத .....சொல்லத்தாம்லே இம்புட்டும்" .
 
 

3 கருத்துகள்:

சாமானியன் சொன்னது…

விளக்கு ஜோடனைகளையும் தாண்டி " மத்தாப்பு போடுவது " என ஒன்று நடக்குமே ?!... மாப்பிளை பெண் வீட்டார் கூடியிருக்கும் முச்சந்திகளில் வண்டியை நிறுத்தி பெரிய வகை கலர் மத்தாப்புகளை கொளுத்துவார்கள் ! " சுமார் மூஞ்சி குமார் " மாப்பிளைகூட சும்மா தகதகன்னு ஜொலிப்பாருல்ல !

தென்னிந்திய, முக்கியமாக தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கென ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் உண்டு. " மாப்ள ஊர்வோலம் " ( மாப்பிள்ளை ஊர்கோலம் ), திண்ணை மெளலூது, நோன்பு கஞ்சி முறை என அது பெரிய ஜாப்தா ! ( பட்டியல் ) இதில் பல வழக்கங்கள் பல்வேறுகாரணங்களுக்காக வழக்கொழிந்து வரும் நிலையில், இந்த கலாச்சாரம் முறையாக பதிவு செய்யப்படாத குறையை உங்களை போன்றவர்களின் வலைப்பூக்கள் நிவர்த்தி செய்கின்றன !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

saamaaniyan சொன்னது…

விளக்கு ஜோடனைகளையும் தாண்டி " மத்தாப்பு போடுவது " என ஒன்று நடக்குமே ?!... மாப்பிளை பெண் வீட்டார் கூடியிருக்கும் முச்சந்திகளில் வண்டியை நிறுத்தி பெரிய வகை கலர் மத்தாப்புகளை கொளுத்துவார்கள் ! " சுமார் மூஞ்சி குமார் " மாப்பிளைகூட சும்மா தகதகன்னு ஜொலிப்பாருல்ல !

தென்னிந்திய, முக்கியமாக தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கென ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் உண்டு. " மாப்ள ஊர்வோலம் " ( மாப்பிள்ளை ஊர்கோலம் ), திண்ணை மெளலூது, நோன்பு கஞ்சி முறை என அது பெரிய ஜாப்தா ! ( பட்டியல் ) இதில் பல வழக்கங்கள் பல்வேறுகாரணங்களுக்காக வழக்கொழிந்து வரும் நிலையில், இந்த கலாச்சாரம் முறையாக பதிவு செய்யப்படாத குறையை உங்களை போன்றவர்களின் வலைப்பூக்கள் நிவர்த்தி செய்கின்றன !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

shamsuyousuff சொன்னது…

மேலபாளையம் பாஷை அது தனிப்பட்ட நீரோட்டமும் அதில் உயிரோட்டமும் இருக்கும் இதை படித்தபின்பு பின்னோக்கி சென்ற நினைவலைகள் ...எழுத எனக்கு வார்த்தைகள் இல்லை ...தெருவு முழுதும் அந்த இறைச்சி சால்னா மணம்... அப்துர் ரஹ்மான் சாஹிப் போட்ட ஏழு தெரு சாப்பாடு ... நினைத்து பார்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது