எனக்குத் திருமணமாகி வந்த முதல் நோன்புப்பெருநாள்.
நான் சென்னைக்கும் ஊருக்கும் அலைந்து திரிந்துக் கொண்டு இருந்தேன்.காரணம் பல்வேறு சிவில் கேஸ்கள் என்னை என் குடும்பத்தை அலைக்களித்துக்கொண்டு இருந்த கடுமையான வேளை அது.
ஒருத்தருக்கொருத்தர் கேஸ் நடத்தும் சாதாரண மனிதர்களுக்கே கோர்ட் உத்தியோகம் மோசமானதாக இருக்கும்.அனால் நானோ தமிழக அரசை அதன் நிலச் சட்டத்தை எதிர்த்து என்னுடைய குடும்பத்து உறுப்பினர்களுக்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தேன்.
சென்னை உயர் நீதி மன்றப் படிக்கட்டுகள் ஏறியதோடு டெல்லி உச்ச நீதி மன்றம் வரையிலும் சென்றேன்.
காலமும் பணமும் விரையமானது.
நாட்டின் அருமையான சட்டங்கள் பல, அரசு அதிகாரிகளின் சோம்பேரித்தனத்தினால், அறியாமையினால் குடிமக்களுக்கு எப்படி எல்லாம் பாதகம் தரமுடியும் என்று மற்றவர்களிடம் சொல்லிக் காட்ட என்னிடம் டாக்ட்டரெட் செய்யும் அளவுக்கு சங்கதிகள் இருக்கின்றன.
திருமணமாகி பதினைந்தாம் நாளிலேயே கேஸ் நடத்த சென்னை வந்து விட்டேன்.
என் தந்தையும் தாயும் .என்னை நம்பி வந்த மனைவியும் பலநேரம் இதனால் வருந்தி இருக்கிறார்கள்.கண்ணீர் விட்டிருக்கிறார்கள்
என்ன செய்வது கேஸ் நடத்தாவிட்டால் இழப்புக்கள் நிறைய வருமே.
.கடமை இருக்கிறதே குடும்பத்து மற்ற பங்காளிகளும் நான் பார்த்துக்கொள்வேன் என்று இருந்து விட்டார்கள்.
பல நேரங்களில் பெரிய வக்கீலை பார்க்கவே முடியாது.கேஸ் கட்டும் கையுமாக ,சில வேளைகளில் புத்தகமும் கையுமாகவே இருப்பார்கள்.
கத்துக்குட்டி ஜூனியர்கள் கைகளில் அப்பாவிக் கட்சிக் காரன் கிடைத்தால் தொலைந்தான் .
நாம் ஒன்னு சொல்ல அவர்கள் நமக்குத்தெரியாததை கோர்ட்டில் சொல்லுவார்கள்.
நாம் கேட்காமலே வாய்தா வாங்கி இன்னொரு நாளுக்கு வழக்கை இழுத்துக்கொண்டு போவார்கள்.
வர்ற வாய்தாவுக்கு நீர் வந்துரும்.வரும்போது மறக்காமே திருனவேலி அல்வா கொண்டாரும்வோய்.
வாய்தா எப்போ
வர்ற மூணாம் நாளைக்குத்தான்.
சார் நான் ஊருக்குப் போக முடியாதே என்ன செய்ய?
இங்கேயே இரும்மையா
வேறு என்ன செய்ய சென்னையிலே இருப்பேன்.
இதற்க்கு மாற்றமாக சில நல்ல வக்கீல்களும் எனக்குக் கிடைத்தார்கள்.
என்னைத் தமது நண்பனாக,தம்பியாக, மகனாகப் பாவித்த நல்லவர்களும் இருந்தார்கள்.
அவர்கள்தான் எனது கண்ணீரைத் துடைத்து கரை ஏறச் செய்தார்கள்.பீஸ் என்று மிகச்சிறிய தொகையை நான் கொடுத்தால் மட்டுமே பெற்றுக்கொள் வார்கள்.
அரிதான அவர்களுக்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நெல்லை வழக்கறிஞர் தீன் மற்றும் அவரது சீனியர் அப்துல் வஹாப் ,சென்னை கொடைஅரசு ஆகியோரைச்சொல்லலாம்.
கோர்ட்டுக்குப் போய்வாய்தா வந்து விட்டால் வேறு வேலை இருக்காது.நேராக வாலஸ் கார்டன் போய்விடுவேன்.
அங்கே தான் அப்போலோ மருத்துவ மனை பக்கம் மணிச்சுடர் நாளேடு மற்றும் முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களின் அலுவலகம் இருந்தது.
எனது குடும்ப வழக்குப் போக்குவரத்தை தலைவர் நன்கு அறிவார்.ஆகவே அங்கே நான் சோர்வாகப் போய் அமர்ந்தால் "என்ன புது மாப்பிளை" எப்படி இருக்கீங்க என்று அன்பு மொழி பேசி கலகலப்பாக்குவார்.
பக்கத்தில் குளிர்ந்த மோர் இருக்கும் அதைப் பருகிடத் தருவார்.கொஞ்சநேரத்தில் தலைவர் வீட்டிலிருந்து மதிய சாப்பாடு வரும் அதைத் தலைவரும் நானும் இன்னும் வேறு யாராவது வந்தால் அவர்களும் பகிர்ந்தே சாப்பிட தலைவர் வற்புறுத்துவார்.எல்லோரும் உண்டுமுடிப்போம்.
ரமலான் மாதம் வந்தது.அப்போதும் வாரக்கணக்கில் சென்னையில் தங்கவேண்டியதிருந்தது.இருபத்து எட்டாம் நாள் ஊருக்குப் புறப்பட ஆயத்த மானேன்.ரொம்ப சிரமப்பட்டு எக்மூரில் இருந்து புறப்படும் பஸ் ஒன்றில் பயணிக்க மேலப்பாளையம் பள்ளி காசிம் என்கிற குடும்ப நண்பர் பயணச்சீட்டு எடுத்து வைத்திருந்தார்.
அந்த பஸ்சை விட்டால் மறுநாள் பஸ் எதிலும் இடமே இல்லை.சரி ஊருக்குப் போய் விடுவோம் என்று முடிவு செய்து விட்டு தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களிடம் பயணம் சொல்லப் போனேன்.
அப்போது மாலை ஐந்து மணி இருக்கும் .தலைவர் தொழுது கொண்டிருந்தார்.சலாம் வாங்கி யதும் நான் நிற்பதைப் பார்த்து விட்டு "என்னா.தம்பி ?என்ன சேதி "என்று அழகான மெல்லிய குரலில் கேட்டார்கள்.
"வாப்பா நான் ஊருக்குப் போகிறேன்"
அவர்கள் எதோ ஒதிகொண்டிருந்தார்கள்.கொஞ்சம் நேரம் காத்திருந்தேன்.
"நாளைக்குப் போலாம் தம்பி "என்று தலைவர் சொன்னார்கள்.
"அடடா நம்ம ஊரில் ஒரு நாளைக்கு முன்னதாகவே நோன்பு வச்சாங்களே.அங்கே இன்னைக்கு இருபத்து ஒன்பது முடிஞ்சு போச்சே..திடீர்ன்னு நாளைக்கு பெருநாள்ன்னு அறிவிச்சுட்டா என்ன செய்ய?நம்மள வாப்பா, உம்மா, மனைவி தேடுவாங்களே.இங்க வந்து பயணம் சொன்னது தப்பாப் போச்சே"ன்னு மனசுக்குள் யோசித்து விட்டு அங்கே மேனேஜராக இருக்கும் நெல்லை ஏர்வாடி மீராசாஹிப் அவர்களிடம் போனேன்.
"சாச்சா,தலைவர் எதுக்காக என்னை நாளைக்குப் போ ன்னு சொல்லுறாங்க?உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு?"கேட்டேன்.
இன்னைக்கு எதோ இப்தார் பார்ட்டிக்கு போறதா தெரியுது.அதுக்கு உங்களைக் கூட்டிட்டு போறதா இருக்குமோ? என்னவோ?ன்னு அவர் பட்டும் படாமலும் வழக்கம் போல் சொல்லி முடித்தார்.
சாச்சா.நாளைக்கு நான் ஊரில் இருக்கணும்.எனக்கு தலை பெருநாள்.என்னை எங்க வீட்டில் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.தலைவர் கேட்டால் பஸ் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருப்ப தால் நான் புறப்படு கிறேன்னு சொல்லி விடுங்கள் என்று வந்து விட்டேன்.
அந்த பஸ் எனக்காகவே காத்திருந்த மாதிரி தெரிந்தது.காரணம் நான் வண்டிக்குள் ஏறியதும் மற்ற பயணிகள் யாவரும் ஒரு பார்வை என்னைப் பார்த்த விதத்தில் நான் ஐந்து நிமிட லேட் என்பதைப் புரிந்து கொண்டேன்.
பஸ் டிரைவருக்குப் பின்னால் இரணடாவது வரிசையில் சன்னலோரத்தில் என்னுடைய இருக்கை. அதில் என்னை விட இளையவர் ஒருவர் இருந்தார்.'"அண்ணே எனக்கு வாமிட் வரும்னே .அதனாலே நான் ஜன்னலோரமா உங்க சீட்ட்ல இருக்கேன்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க"என்றதும் அடுத்து உள்ள சீட்டில் அமர்ந்தேன்.
என்னை அடுத்து நடை பாதை.அதற்கடுத்துள்ள சீட்டில் நெல்லை வழக்கறிஞர்முருகவேல் அவர்களும்,அவருக்கு அடுத்து ஊத்து மலை இளைய ஜமீன்தார் எஸ்.எம்.பாண்டியன் என்கிற சங்கர மருதப்ப பாண்டியன் அவர்களும்.இருந்தார்கள்.
ஊத்துமலை ஜமீன் தாருக்கு எங்கள் குடும்பத்தையும் என் வாப்பாவையும் நல்லா தெரியும்.அவருக்கு மோட்டார் சைக்கிள்கள் மேலே ரொம்பவும் காதலும் மோகமும் உண்டு.
திருநெல்வேலி வட்டாரத்தில் பி.எஸ்.எ.மோட்டார் சைக்கிள் அவர் மட்டுமே வைத்திருந்தார்.
அப்போதெல்லாம்1970 களில்மோட்டார் சைக்கிள்களை அவர்மாதிரி ஆட்களும்,பண்ணையார்களும்,போலீஸ் இலாக்காவைச் சேர்ந்தவர்களும் .பெரிய வியாபாரிகளும் தான் வைத்திருந்தார்கள்.அவர்கள் எல்லோரும் திருநெல்வேலி பரமன் அண்ணாச்சி கடையில் ஒன்று கூடுவார்கள்.அங்கே எங்கள் குடும்பத்தில் இளையவரான எங்கள் வாப்பாவும் அவரின் அண்ணன் வைத்திருந்த ராஜ்டூட் மோட்டார் சைக்கிளை கொண்டு செல்வார்.
அந்த மோட்டார் சைக்கிள்கள் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வைத்தது.
அந்தக் கடையில் த.பி.சொக்கலால் ராம் சேட் பீடி முதலாளி ஹரிராம் சேட் படம் இருக்கும்.அவர் தான் அந்த கடையை உருவாக்கியதாகச்சொல்லுவார்கள். எங்க வாப்பா சில நேரங்களில் என்னையும் மோட்டார் சைக்கிளில் அங்கே அழைத்துச் செல்வதுண்டு.அங்கே தான் ஊத்துமலை என்னை பல முறைப்பார்த்துள்ளார்.நான் வளர்ந்த பிறகும் போற வாற இடங்களில் பாசமாக அழைப்பார்."யோவ்... மருமகனே"என்று.
யோவ்...எங்கய்யா உன்ன ஊர்ல பாக்கவே முடியல்லே?என்னய்யா பண்ணிக்கிட்டுருக்கே? என்று பார்த்த இடத்தில பஸ்சில் என்னை விசாரித்துக்கொண்டார்.நான் ஒரு கேஸ் விஷயமா மெட்ராசுக்கு வந்ததை மட்டும் சொன்னேன்."ஒங்க அப்பா சுமையை நீர் சுமக்கீராக்கும் ".
எங்க வாப்பா மற்றும் நில விபரங்கள் கேட்டு முடிக்கும் போது வண்டி தாம்பரத்தை நெருங்கி இருந்தது.
யோவ்,என்னைய்யா இது .அரை மணி நேரத்துல இந்த டிரைவர் இங்க வந்துட்டாநேய்யா?
ஆமாம் ராஜா மாமா.
அப்போதுதான் அந்த டிரைவர் பஸ் ஓட்டுகிற 'அழகை' கவனித்தேன்.மோசமான ட்ரைவிங் .மனசு என்னவோ போல் இருந்தது.
"யோவ் இவன் நம்மை ஊர் கொண்டு சேப்பானாயா""விழுப்புரத்துல பஸ் மாறிட வேண்டியது தான்யா"இப்படி அவர் சொன்னதும் எனக்கு பக் என்று இருந்தது.
பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்த பஸ் விழுப்புரத்தில் ஒரு ஓட்டல முன்பாக வந்து நின்றது.சுற்றிலும் ஆம்பிளைகள் மூத்திர நெடியில் தங்களுடைய கட்டாயக் கடமையை முடித்துக்கொண்டிருந்தார்கள் .
வேற ஏதாவது பஸ்சில் மூணு டிக்கெட் கிடைக்குமான்னு ஊத்து மலை அக்கம் பக்கம் நின்ற பஸ்களில் விசாரித்தார்.எல்லாம் புல்.

2 கருத்துகள்:
ஐயா வணங்குகிறோம்.
௨௩்கள் வாழ்க்கை பயணம்
தி௫நெல்வேலி சென்று வாழ்ந்தது போல இருக்கு.
அருமையான பதிவு.
பதிவிட்டமைக்கு நன்றி ஐயா

கருத்துரையிடுக