வசந்த கால நினைவலைகளில்.......
முஸ்லிம் லீக்
தலைவர்களின் எண்ணங்கள் அடிக்கடி
வந்து செல்லும்.
எங்களுடைய குடும்ப மூத்த
தலைமுறையினர்,
விடுதலைப்போராட்டத்தில்
கலந்து கொண்டு
பல்வேறு அடக்குமுறைகளுக்கு
ஆளானவர்கள்.
மறைந்த தலைவர்கள்
காயிதேஆஜம் முஹம்மது அலி ஜின்னாஹ்,
லியாக்கத் அலி கான், தந்தை பெரியார்,
கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,
சட்ட மேதை KTM. அகமது இப்ராஹிம்...M.S.அப்துல் மஜீத்
தென்காசி மேடை முதலாளிகள்
மு.ந. அப்துர்ரகுமான் சாஹிப், மு.ந. முஹம்மது சாகிப், சென்னை ரஹீம் சாகிப், கடையநல்லூர் வெ. கா .உ.அ.அப்துர்ரகுமான் சாகிப், கல்லிடைக்குறிச்சி TM.பீர்முகம்மது சாகிப் உள்ளிட்ட பெரு மக்களோடு தொடர்புடையவர்கள்.
திருநெல்வேலி District Board என்கிற மாவட்ட உயர் பதவியில் எங்கள் குடும்பத்தின் மூத்தவர் LKS. அப்துல்லாஹ் லெப்பை Vice. President ஆக முஸ்லிம் லீக் சார்பாகத் தேர்வுகள் பெற்றவர்.
சொக்கலால் ராம்சேட் பீடி குடும்பத்தின் முக்கூடல் பாலகன் பீடிஅதிபர் D.S. ஆதிமூலம், விஸ்வநாதராவ் முதலானோர் அதன் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள்.
DS.ஆதிமூலம் அவர்களின் மகன் சிவப்பிரகாசம் அவர்கள் பின்னாட்களில் தி.மு.கழக நாடாளு மன்ற உறுப்பினராக இருமுறைகள்திருநெல்வேலித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
அந்தக்கால திருநெல்வேலி என்பது மேற்கே சிவகிரி தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் கன்னி ராஜ புரம் வரை நீண்டு பரந்து விரிந்து இருந்ததாகும்.... இந்தப்பரப்பில் உள்ளவர்கள் வாக்களித்து அவர்கள் பதவியில் தேர்வு பெற்றவர்கள் ஆவார்கள்.
மேலப்பாளையம் நெசவாளர்கள் சார்பாக தங்கத்தில் இந்தியப் படம் செய்து, அதனை முகம்மது அலி ஜின்னாஹ்விடம் கொடுத்தவர்கள் எங்கள் குடும்பப் பெரியவர்கள்.
அந்தத் தொடரில் தான், எங்கள் மீது அன்பும் பாசமும், மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிப், அப்துல் லத்தீப் சாகிப், திருச்சி நாவலர் AM.யூசுப் சாகிப், AK. ரிபாயி சாகிப் Ex. MP, எங்கள் உறவினர் SA. காஜா முகைதீன் Ex.MP என்று தொடர்ந்து வந்தது.
எங்கள் மாமா வழக்கறிஞர் LKM. அப்துர் ரகுமான் சாகிப் மேலப்பாளையத்தில் 3 முறை முஸ்லிம் லீக் நகர்மன்ற தலைவர் பொறுப்பில் இருந்தார்.
அவர்காலத்தில் நத்தம் தாமிரபரணி ஆற்றில் பாலம் கட்ட ஏற்பாடுகள் செய்து திறந்தார்.
மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவப் பிரிவு கட்டிடம் கட்ட பொதுமக்களிடம் நிதித்திரட்டி ஏற்படுத்தினார்...
முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளராக 32 ஆண்டுகள் பணியாற்றினார்.
சத்தக்கத்துல்லா அப்பாக் கல்லூரி நிறுவ மறைந்த மக்கள் தொண்டர் ஜமால் முகம்மது முதலாளியோடு, கடும்பணிகள் செய்தவர்.
எங்கள் குடும்ப நிலங்கள் பல.... கோவில்கள், சர்ச்,பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் முதலானவற்றிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டவை....இன்னும் திருமண மண்டபங்கள், பொதுமக்கள் பணிக்காக கொடுத்தவையும் சேரும்.
இதுவெல்லாம் எங்களின் பொதுவாழ்வு.
அதனால் இழந்தது சொல்லிமாளாது.
அது எனது தலைமுறை வரை தொடர்கின்றது.
ஆனாலும் எல்லாம் தாண்டி....எங்களால் முடிந்த பணிகள் செய்து வருகிறோம்.
மனம் வாடுகிற நேரங்களில் வாழ்த்துக்கள் வளம் சேர்க்கின்றன தோழர்களே...
(இந்தப்படம் 1987 ஆம் ஆண்டு MLM.முகம்மது லெப்பை மாமா குடும்ப நிகழ்வில் எடுத்ததாகும்.
படத்தில் தலைவர் சிராஜுல்மில்லத் அப்துஸ்ஸமதுசாகிப் , SA. காஜாமுகைதீன் சாகிப் Ex. MP, அவர்களோடு மாமா சாந்து. செய்யது அலி சாகிப், ஹாபிஸா முஹைதீன் அப்துல் காதர்,மைத்துனர் KAO. புகாரி முதலானோரோடு நானும் இருந்தேன் )