புதன், 11 ஏப்ரல், 2012

நண்பர்களே,வாருங்கள்

என்னருமை மேலப்பாளையம் மற்றும் திருநெல்வேலி நண்பர்களே,மற்றும் அதையும் தாண்டி என் உள்ளத்தின் அருகில் அமர்ந்துள்ளோரே....
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்பும் அமைதியும் சூழ வாழ்கவென்று வாழ்த்துகிறேன்.

நமக்குள், வல்ல ஏக இறைவன் இணக்கத்தை ஏற்படுத்துவானாகவும்.

நம்மைப் பற்றி..... நம்மைச் சுற்றி நடந்த, மற்றும் நடக்கிற வற்றை பகிர்ந்து கொள்ள இந்த தளத்தை பயன் படுத்தலாம் என நினைக்கிறேன் .
என்றுமே நலமே நினைப்போம்.....
இந்தத் தளத்தில் எழுதுவதன் மூலம் மனதில் உள்ளவற்றை வெளிப்படை ஆக்கலாம் என்று எண்ணுகிறேன்......

நண்பர்கள் தமக்குத் தெரிந்தனவற்றை நமக்குள் பகிர்ந்து கொள்ளலாம்.
அது குடும்பங்கள்,நகரம்,மாவட்டம்,மாநிலம்,நாடு,உலக அளவில் உள்ளதாகக் கூட இருக்கலாம்.
நமது ஊர் நண்பர்கள், குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் நம் நாட்டிலுள்ள இளைஞர்கள்  நல்ல வாசிப்பாளர்களாகவும்.விமர்சிப்பாளர்களாகவும் .உள்ளார்கள் என்பதை,பல்வேறு வலைப் பதிவுகள்,முகநூல் வாயிலாக   அறிந்து வருகிறேன்.

,அவர்களிடமிருந்து பல்வேறு அரிய தகவல்களைக்  கற்றுக்கொள்ளும் பல்லாயிரம் மாணவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.

நமது சிந்தனையாலும்,பேச்சாலும்.எழுத்தாலும் பிறருக்கு நலத்தை ஏற்படுத்துவோம்.வாருங்கள் தோழர்களே!

எண்ணங்களை எழுதுகிறேன்....தவறான செய்திகள் பிழைகள் இருந்தால் சொல்லுங்கள்.....மனமுவந்து திருத்தம் செய்துகொள்கிறேன்.

தனித் தமிழில் எழுதிப் பழகிய என்போன்றவர்கள் கரிசல் இலக்கிய மேதை கி.ராஜ நாராயணன் அவர்கள், தோப்பில்.முகம்மது மீரான்,எங்களால் வாப்பா என்று அழைக்கப்படும் நெல்லைக்கண்ணன்  முதலானவர்களின் எழுத்து நடைகளைப் பார்த்து விட்டு நாமும் நம்மூர் தமிழ் நடையில் எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

கட்டுரைகளை என்றாவது புத்தகமாக்கி வெளியிடும் ஆசையும் மனசு நிறைய இருக்கிறது.

 இதுல ஒரு வசதி என்னன்னா.?......வாசிப்பவர்களுக்கு எது புடிக்கும்,புடிக்காது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
பாப்பம்... எனக்கு எழுத எப்படி நேரம் கிடைக்குதுன்னு.

2 கருத்துகள்:

em.em.dheen சொன்னது…

Anbu mihuntha ullankalai ninaithtu parpathu arumaiyanathu Athuvum ungal kudumbathal oruvaraka vazhntha lebbaru mama ponra nabar kidaippathu peria bakkiam. Athuvum ungal katturaiyil pazha ninaivukalai kondu vanthirappathu sirapppaka iruthuthathu Thodarthu ezhuthunkal.

பெயரில்லா சொன்னது…

மண் வாசனையுடன் வலம் வரும் தங்களின்
வலைத்தளம் பாராட்டிக்குரியது ! போற்றுதலுக்குரியது ! தங்கள் ஆக்கங்களை
வலைத்தளத்தில் படிக்கும்போது......புகைப் படங்களைப் பார்க்கும்போது .... என்னை என்
பால்ய பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது
நம் ஊரைப் பற்றி ..... நம் முன்னோர்களைப்
பற்றி..... தாங்கள் சேகரிக்கும் தகவல் களஞ்சியம்
வரும் காலத்தில் பயனுள்ளதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை ! தாங்கள் இஷ்டப்பட்டு
கஷ்டப்படும் இம் முயற்சி வெற்றி பெற வல்ல
நாயனைப் பிராத்திக்கிறேன்