வெள்ளி, 18 அக்டோபர், 2013

கனவுகள் காணும் கன்னியர்கள் .....




  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு கல்வியின் பேரால் வாழ்க்கைத்துணை அமைய
    தடைகள், இருப்பதில்லை...ஆனால் மேலப்பாளையத்தில் இது...... தாண்டவ மாடுகிறது....

    எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு பெண் மக்களை,படிக்க வைக்கிறார்கள், பட்டதாரிகளாக,என்ஜினியர்களாக்குகிறார்கள்......ஆனால் அவளது பணி?......பெரும்பாலும் அடுப்படியில் தான்.....

    சில சம்பந்தங்களில் "பொண்ணு வேலைக்கெல்லாம் போகக் கூடாது", என்று கண்டிசன் போட்டே திருமணம் நடக்கிறது....

    அண்மையில் "அரசு வேலை கிடைத்த பெண் வேண்டாம்", என்று ஒரு சம்பந்தமே நின்று போய் விட்டது....

    மாப்பிள்ளைகளோடு வெளிநாடுகளில் பணி செய்ய்கிற வாய்ப்பு மிக,மிக குறைவானவர்களுக்கே கிட்டுகிறது..

    நம்மூர் பெண்மக்கள், வெளி ஊர்களில் குடும்பத்துடன் தங்கி படித்து பட்டதாரிகளாகி.... மேலப்பாளையத்தில் மாப்பிள்ளை தேடினால்....அந்த சம்பந்தத்தை அந்நியமாக பார்ப்பதைக் கேட்டு மிக வருத்தப் பட்டேன்...

    தந்தை மறைந்து, தாயின் பாதுகாப்பில் படித்து பட்டம் பெற்ற பெண் மக்களின், கண்ணீரும் கேள்விப்படும் போது மனது படாத பாடு படுகிறது.

    பெண்மக்கள் கல்வியில் முன்னேறினால் தான் வீடும் நாடும் முன்னேறும்.
    வரும் காலம் இன்டர்நெட், எல்லாவற்றையும் இணைக்கும் காலம்.

    சாதாரணமான போன் பில் முதல் வங்கிக்கணக்கு ட்ரான்ஸ்பர் வரை,எல்லாவற்றையும் நெட் மூலமாகவே செய்கிற காலம் வந்துவிட்டது....

    அதற்கு ஆங்கில மற்றும் அடிப்படை அறிவு, எல்லோருக்கும் தரவேண்டும் ,அவை குறிப்பாக பெண் மக்கள் பெற வேண்டும் என்று உழைக்கிற கூட்டத்தில் நானும் இருக்கிறேன்..

    படிக்கிற எதிர் கால சந்ததிகளுக்கு, நல்ல கல்வி அதிகம் தர, தாயும் தந்தையும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தால் மென்மேலும் நல்வழி,காட்டமுடியும் என்பதே என் கருத்து.

    இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்...பெற்றோர்களுக்கு எடுத்து வைக்க வேண்டும்.....

    சமீப காலமாக..... அழகும், நிறமும், கொஞ்சம் குறைவான மணப்பெண்களின் திருமணம் பல்வேறு காரணங்களால் தடை படுகிறது.

    கொஞ்சம் நிறம் குறைவான பெண்களைப் பெற்றெடுத்தவர்கள்,தம் மகளுக்கு தகுந்த மாப்பிள்ளை தேடி அலைந்து, படும் பாட்டை......சொன்னால் பரிதாபம் தான்..இதயம் தாங்காது...

    இளைஞர்கள் அந்த பெண்மக்களையும் அவர்களின் உள்ளத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும் ...அடுத்த வீட்டுப் பெண்மக்கள் அவர்கள் தம் மாப்பிள்ளைகளோடு மண முடித்துச் செல்லும் போது...."நாமும் இப்படிப் போகவில்லையே?.......அதற்கு நிறம் ஒரு தடையா ?" என்று வேதனைப் பட மாட்டார்களா?

    அவர்கள் சிவப்பாகப் பிறக்காதது யார் குற்றம்.?...ஒவ்வொருவரும் விரும்பியா கருப்பாகவோ,புது நிறத்திலோ,வெளுப்பாகவோ பிறக்கிறார்கள் ? அது தாய் தந்தை முன்னோர் " ஜீன்ஸ்"தருகிற அமைப்பு.அதுதான் உண்மை...

    அண்மைக்காலமாக மகரைக் கொடுத்து மணம் புரியும் இளைஞர்கள் பெரும்பான்மை ஆகி விட்டார்கள்.

    வரதட்சணை கொடுமையை அனாச்சாரங்களை .... தூரவீசி, எறிந்து விட்டார்கள்...லட்சக் கணக்கில் மங்கைக்கு, மஹர் கொடுத்து மனம் புரியும், தைரியத்தை வாய்ப்பை, இன்றைய இளம் தலைமுறைக்கு அல்லாஹ் தந்துள்ளான்.அல்ஹம்துலில்லாஹ்.....

    இக்கால இளைய தலை முறை, இதையும் செய்வார்கள்,... நிற பேதம் பார்க்காமல், அந்தப் பெண்மக்களுக்கு வாழ்வு கொடுப்பார்கள், என்கிற நம்பிக்கை,என் போன்றவர்களுக்கு அதிகம் இருக்கிறது....)


 

       

 

 

 

 

 

7 கருத்துகள்:

அப்துல் ஜப்பார் சொன்னது…

நல்ல அற்புதமான பதிவு பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த பெற்றோர்களின் மனநிலையை சமுதாயத்திற்கு அறிய வைக்கின்ற பதிவு.அந்த மாப்பிளை கேட்கிற மாதிரி பெண்ணை நாம் செய்து தான் கொடுக்க முடியும் கொள்ள பேரு இப்படி கிறுக்கு பிடித்து அலைகிறார்கள்.அவர்களுக்கு வல்ல ரஹ்மான் தான் நல்ல சிந்தனையும் நல்ல புத்தியையும் அந்த பெண்ணும் அந்த பெண்ணை பெற்ற பெற்றோர்களும் படும் வேதனையை அறிய இவன் போன்றவனுக்குவரிசையாக பெண் பிள்ளையாக கொடுத்து வலியினை உணர செய்ய வேண்டும்

Asiya Omar சொன்னது…

//“பொம்பிள்ளைகளை படிக்க வச்சா தப்பா? “//

இதே கேள்வி நான் 1989 -ல் படிப்பு முடித்து கல்லூரியை விட்டு வெளியே வந்த பொழுது என் மனதிலும் எழுந்தது தான்.அந்த நிலைக்கு நம்மை நம் ஊரில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.இத்தனை வருடமாகியும் துளியளவும் மாறாமல் அதே மனநிலை தொடர்வது கண்டு மிக்க வேதனை.

syed Aboobucker சொன்னது…

" மீரான் அவர்களுக்கு,
இது சமுதாயத்தின் தலைஎழுத்து என்று எண்ணாமல்.
think different, என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்,
படித்தவன் இப்படி கீழ்த்தரமாக நினைக்க மாட்டான்.
பெண் மக்கள் படிப்பு, அவர்களும் சுய பாதுகாப்பு, சமுதாய பாதுகாப்பு என்று அவர்களால் ஆன சமுதாய பங்களிப்புக்கு
நல்ல வழிகாட்டும், பழமொழி என்னவென்றால் மக்கத்திலும் இருப்பான் ப்ப்ப்ப்ப்ப் மாடன் என நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது தான். பெண் கல்விக்கு என் ஆதரவு என்றும் உண்டு,வாழ்க பெண் சமூகம், வளர்க நம் சமுதாயம், நன்றி."

ஹுஸைனம்மா சொன்னது…

அதென்னவோ, என்ன பிரச்னை என்றாலும், உடனே அதைப் பெண்களின் தலையில் சுமத்திவிடுகிறார்கள் சிலர்!! :-))

இயலாமை, வேதனை நிறைந்த கலக்கத்தில் உங்கள் நண்பர், தவறான தீர்வை முன்வைக்கிறார். மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதா?

நமதூர் “மாப்பிள்ளைகள்” போடும் கண்டிஷன்களில் அழகு, கல்வி, அறிவு, அடக்கம், செல்வம் என்று எல்லாமே இருக்கும்போது, கல்வியை மட்டும் தடுத்துவிட்டால், பிரச்னை தீர்ந்துவிடுமா?

கல்வி கற்ற பெண்கள் - குறிப்பாக முஸ்லிம் பெண்கள் - பெற்ற அறிவை எங்கு, எப்போது, எவ்விதம் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். ஏனெனில், அறியாமல் புரியாமல் சிறு தவறு செய்தாலும் அது “படிச்ச திமிரு” என்று அங்கும் கல்வியே குற்றம் சாட்டப்படும் கதைகள் அறிந்ததே!! ஆக, கல்வி ஒரு தடைக்கல்லே அல்ல!

நான் பார்த்த வரையில்,நம்மூர் பெண்களுக்குத் திருமணம் தடைபடுவதற்கு மிக முக்கியக் காரணம் ‘அழகு’தான்!!! கல்வி, செல்வம் (வரதட்சணை, சீர்) போன்றவற்றைச் சிரமப்பட்டாவது மகள்களுக்கு தந்தையர் கொடுத்துவிடுகின்றனர். ஆனால், ‘சிவப்பு’ நிறத்தை எப்படித் தருவது?? அது பரம்பரையாக வருவதல்லவா?

கூடுதல் பணத்தால்கூட “அழகின்” குறைபாட்டை ஈடுசெய்ய முடியாத அளவுக்கு, நம்மூர் இளைஞர்கள் என்றில்லாமல் பொதுவாகவே அனைத்து இளைஞர்களும் (விதிவிலக்கானவர்கள் உண்டு) இதில் தெளிவாக இருக்கின்றனர்!! எடுத்துச் சொல்லித் திருத்த வேண்டிய குடும்பத்தினரும் இதற்கு உடந்தை என்பதுதான் இதில் வேதனையானது.

திருமணத்தைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறுகையில்,

"ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக மணம் முடிக்கப்படுகின்றாள். 1. அவளின் செல்வத்திற்காக, 2. அவளின் குடும்பப் பாரம்பரியத்திற்காக, 3. அவளின் புற அழகிற்காக, 4. அவளின் மார்க்க அறிவிற்காக. இவற்றில் மார்க்க அறிவை நீ தேர்ந்தெடுத்து ஈடேற்றம் அடைந்து கொள்" என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

மாற்றம் வரவேண்டியது, ஆண்களிடத்தில் - ஆண்மக்களைப் பெற்றோரிடத்தில்!! எப்போதும் பெண்ணுக்கு மட்டுமே அறிவுரைகள் கூறும் உலகம், ஆணுக்கும் இதைச் சொல்லித் தரட்டும்!!

Gazzali Gazzali சொன்னது…

No this is old mindset. These days our boys prefer to marry educated girls, we should encourage this shift. True,there are still some guys who hesitate to take educated brides and parents who suffer in finding good match.But let us not highlight this which may,perhaps, affect girls education

ismail சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Asiya Omar சொன்னது…

இச்சூழலை ஆணாதிக்க சமுதாயத்தின் ஒரு பகுதியாகத்தான் நான் பார்க்கிறேன்.
நம் சமுதாயத்தின் சிந்தனைகள் இன்னும் விரிவடைய வேண்டியிருக்கிறது. மற்ற ஊர்களைக் காட்டிலும் நம் ஊர் மக்களின் சிந்தனையோட்டம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இதற்கு இளைஞர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு பெற்றோரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டியுள்ளது. ஆண் பெண் மக்களை வளர்க்கும் முறையில், தனி மனித உரிமை விஷயத்தில், பாகுபாட்டோடு தான் வளர்த்து வருகிறோம். இந்நிலை மாற வேண்டும்.
மேலப்பாளையத்தை பொறுத்தவரையில், அனைத்தும் உள்ளூர் சம்பந்தங்களாகவும், உள்ளூர் சம்பந்தங்களையே எதிர் பார்த்தவர்களாகவே இருக்கிறோம். இதுவும் நம் சிந்தனைகள் விரிவடையாமல் இருப்பதற்கு பெரிய காரணியாகக் கருதுகிறேன். நாம் ஆண், பெண் பிள்ளைகளை அவர்களுடைய நியாயமான உரிமைகளுக்கு இடம் கொடுத்து வளர்த்தாலே போதும், இந்நிலை கண்டிப்பாக மாறும். நண்பர் ஹனீஃபா சொல்லுவது போல் இது ஒரு நாளில் சாத்தியமல்ல. காலப் போக்கில் மாறும். மற்ற ஊர்களைக் காட்டிலும், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், நம் சமுதாய மக்களின் எண்ணங்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது என்பதை எண்ணும் பொழுது, மிகவும் வருத்தமளிக்கிறது.
தற்காலத்தில் நம் இளைஞர்கள், தம் உரிமைகளை ஓரளவு உணர்ந்தவர்களாகவும், அதனைப் பெறுவதில் முனைப்புடனும் இருக்கிறார்கள். அதேபோல், பெண் பிள்ளைகளும், தம் உரிமைகளை உணர்ந்தவர்களாக வளர்க்கப்பட வேண்டும். திருமணச்சந்தையில் விற்கப்படும் அடிமைகளாக அல்ல.
That women should be encouraged to study as much as possible and work so as to be economically and emotionally independent - there can be no doubt. Dark complexion is not a disadvantage. When woman becomes really independent, she will choose her mate. No need to beg men to marry women as if it is a big sacrifice they are making. Still we seem to be living in a pre-historic society among pre-historic men.

ஆக, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்,
Let us see what is practical within our limits:


1) Encourage to study as long as possible
2) Encourage to work as a means of economic independence
3) Encourage to participate in social activities.
4) Encourage them to make independent choices
5) Expose them to liberal views
6) Gradually increasing their independence and decreasing their dependence on us