திங்கள், 10 மார்ச், 2014

பாட்டால் கட்டிப் போட்டவர்கள்...

நூறாண்டுகளுக்கும் மேலாக மேலப்பாளையம் மக்களோடு கலந்து, மகிழ்ச்சியையும்,பெருமிதத்தையும் தந்தது  தயிரா இசை...என்கிற ஒரு வகை இசை ஆகும்....தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதை "தப்' அல்லது "தப்ஸ்"  இசை என்றே அழைக்கிறார்கள்..
மேலப்பாளையத்தில்  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை,
நூருல் ஆரிபீன் கம்பெனி,
ஹைத்து ரூசியா கம்பெனி,
முகைதீன் அலங்காரக் கம்பெனி,
தங்கள் கம்பெனி,
கோட்டாத்துக் கம்பெனி,
காளை கம்பெனி,
ஓதி கம்பெனி,
இக்பால் இசைக்குழு ....என்று வரிசையாகத்  தயிரா கம்பெனிகள், நிறைய இருந்து வந்துள்ளன...
ஆனால் காலத்தின் ஓட்டத்தால், அவை எல்லாம் கலைந்து காணாமல் போய்,  "தயிரா" மற்றும் முரசு வடிவத்திலான "டங்கா" என்றால் என்றால் என்ன ?  என்று, அடையாளம் காட்ட, இக்பால் இசைக்குழு மட்டும் தான் கடைசி தருணத்தில், இருக்கிறது... அடுத்தத் தலை முறை இதை வீடியோ பதிவில் தான் பார்க்க முடியும் என்கிற நிலையில் உள்ளது...... 
எம்.கே. தியாக ராஜ பாகவதரும் , பி.யூ.சின்னப்பாவும், கிட்டப்பாவும்,டி.ஆர்.மகாலிங்கமும், பாடல்களால், மனசெல்லாம் ஆட்சி செய்த அந்தக்காலத்தில் நெசவாளிகள்,  சினிமா பாடல்களைப் பாடவில்லை...பிற்காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களும் பாடவில்லை.....மேலப்பாளையம் "வாலை தாசன்"என்கிற மஞ்சி முகம்மது எழுதித்தந்த பாடல்களைத்தான்....பாடி மகிழ்ந்தார்கள்......

பாகவதரின் பாடல்களையும்,எம்.ஜி.ஆர்.,சிவாஜி படப் பாடல்களையும் தாண்டி ,"காக்குழியில்" தறி நெய்த சாமான்யர்களின் பாடல்கள் பல தந்தது, வாலை தாசன் முகம்மது தான்.  அவரின் பாடல்களை இக்பால் இசைக்குழு..மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு தப்ஸ் இசைப் பாடகர்கள்  ,பக்கீர்கள் .ஆண்டுகள் எழுபதையும் தாண்டி, இன்னும் பாடிக்கொண்டு வருகிறார்கள்..
" நெய்யும் போதே ஞானக் கவிகள் பாடிக் கொண்டு நெய்ததால், அந்த வேஷ்ட்டியை உடுத்துக் கொண்டு செல்லும் போதெல்லாம் சிறப்பு" என்று கூறித் தந்த நெசவாளிகள்....நிறைய இருந்தார்கள்...
அந்தக்கால அரசியல் தலைவர்கள் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,அவரது சகோதரர் சட்ட மேதை கே.டி. எம்.அகமது இப்ராகிம், வழக்கறிஞர்கள் எல்.கே.எம்.அப்துல் ரகுமான், முகம்மது ஹுசைன் சாகிப், முதலான மூத்தவர்கள் காத்து நின்றது நெசவுத்தொழில் ஆகும்..........

மேலப்பளையத்தின் தறிகளில் உருவான தரமிக்க கைத்தறி ஆடைகள், பர்மா நாட்டின் ரங்கூன், மாண்ட்லே, அவ்கான், முதலான இடங்களிலும்  பாக்கிஸ்தான் நாட்டில் கராச்சி, பங்களா தேசில்  சிட்ட காங் மேற்கு வங்காளத்தில் கல்கத்தா கேரளத்தில்  ,கொச்சி,கொல்லம் போன்ற இடங்களிலும் புகழ் பெற்று விளங்கியது.

அப்போது மேலப்பாளையத்தில் மாஸ்ட்டர் வீவர்களாக விளங்கிய, என் பெரிய வாப்பாமார்களான LKS. பிரதர்ஸ் என்று அழைக்கப்பட்ட அப்துல்லா லெப்பை, முகம்மது மீரா முகைதீன் தரகனார், ஷேக் மதார், தக்கடி உதுமான் தரகனார் என்கிற T.S.M.O. உதுமான் சாகிப், லேஸ் ஹவுஸ் புகாரி சாகிப், மூளி கலந்தர் லெப்பை, சமாயினா யூசுப் லெப்பை, பருத்தி சாகுல் ஹமீது தரகனார், பருத்தி ஹனீபா தரகனார், முதலான பெரும் ஏற்றுமதியாளர்கள் இருந்தார்கள்....அவர்கள் இந்தக் கம்பெனிகளை ஆதரித்து வந்தார்கள்...
கைகளுக்கும்,கால்களுக்கும் சதா வேலையைக் கொடுத்த தறித்தொழிலின்  நெசவாளர்கள், நெய்யும் போதே பாடிக கொள்வார்கள்.....அவர்கள் பாடுகின்ற பாடல்களுக்கு தறியின் நூலைத்தாங்கிய ஓடம ஓடும் ஒலியும் மிதியின் சப்தமும் ஒரு வகை தாளத்தைக் கொடுக்கும்...மனம் மறந்து பாடுவார்கள்...   

சினிமாப் பாடல்களின் மோகத்தில் நெசவாளிகள், மூழ்கி விடாமல் ,ஆனால் அதே ராகத்தில் இஸ்லாமியப் பாடல்கள் பல பாடித்தந்த பெருமை வாலை தாசன் முகம்மது அவர்களுக்கு உண்டு....
அவர் எழுதிய ஒவ்வொரு பாடலிலும் அவரின் பெயர் விளங்கும் வகையில் "வாலை தாசன்" என்கிற பெயரை பதித்திருப்பார்.... வயிற்று வலியின் கடுமையால், 1964 கால கட்டத்தில் இறந்து போய் விட்டார்..
அவர் இருக்கும் போதே அவர் எழுதிய பாடல்களை அவரோடு கல்யாண வீடுகளிலும், ஹஜ் பயண வரவேற்புகளிலும், மார்க்க நிகழ்வுகளிலும் பாடியவர்கள், "காடி" புகாரி, "சமாயினா" முகம்மது ஹுசைன் வாத்தியார் ஆகிய இருவரும் ஆவார்கள்.மேலப்பாளையம் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களுக்கும் அறுபது வயதைத்தாண்டிய இந்த தயிராக்குழு ஹுசைன் வாத்தியார் மகன் சமாயினா சுலைமான் தலைமையில் தற்போது  பாடுவதற்கு சென்று வருகிறது.....

இன்று வயோதிக நிலையில்,  அரசு தரும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தில்,  தம் மகளோடு வாழ்ந்து வருகிற ஹுசைன் வாத்தியார்,  ஏழு கட்டை சுதியில் அவர் பாடிய பல்வேறு பாடல்களை, நினைவு படுத்தி பாடிக்  காட்டுகிறார்...........
காவேரிதான் சிங்காரி....சிங்காரித்தான் காவேரி...".........சினிமா பாடல் மெட்டில்,அவர்கள் பாடிய பாடல் ஒன்று, மேலப்பாளையம் ஊரில் திரும்பிய பக்கமெல்லாம்  பெரும் பரபரப்பை கொண்டு வந்ததாம்... சிலர் மேடையேறி அடி தடிக்கும் வந்தார்களாம்...அது ஒரு காலம்.... என்று நீண்ட பெருமூச்சு விட்டு..... பாடிக் காட்டினார்... 
அந்தப்பாடல் இப்படி ஆரம்பித்தது

"மேதாவி போல் மாபாவி ....
மாபாவி போல்  மேதாவி.......

அருளைப் பெற்றவன் மேதாவி.....

அலைந்துகேட்டவன் மாபாவி....."...
அப்புறம் அனு பல்லவியாக ....
அந்தப்பாடலில்............
"சாகிப் என்ற பேரை வைத்து தடுமாறி....
சில....
சாகிபுகள் இருக்கிறார்கள் நிலை மாறி...."
என்று,  அந்தக் காலத்தில் சீர்திருத்தக் கருத்துக்களை தயிராவை வைத்துக் கொண்டு அவர் பாட, கடும் கண்டனங்களைச் சந்தித்த வற்றைச்சொல்லிக் காட்டினார்..........
அவரைப்பற்றி வரும் இன்னும் அதிகமாக பதிவிட வேண்டியதுள்ளது...

4 கருத்துகள்:

P B Ahmed Mohideen சொன்னது…

Migavum arpudhamana padhivu. Thodarndhu ezhudhumaaru vendugiren. Anbudan,
Dr. Ahamed Mohideen, Melapalayam.
Presently at Mumbai with Lodhagroup.

பெயரில்லா சொன்னது…

எங்களுடைய பூர்வீகம் மேலப்பாளையம் .
ஆனால் இதுவரை நான் மேலப்பாளையத்தை பார்த்ததில்லை .
சென்னயிலே வளர்ந்து சென்னயிலே படித்து பின்னர் வட நாட்டு
பக்கம் வேலைக்காக வந்து விட்டேன் .எங்களுடைய மூதாதையர் தொழில்
நெசவு . எங்களுடைய பாட்டனார் காலத்திற்கு பின் யாரும் நெசவு தொழிலை
தொடரவில்லை .காடி புகாரியை எனக்கு நன்றாக தெரியும் .நான் பள்ளி கூட
மாணவனாக இருந்த போது அவர் பொது நிகழ்ச்சிகளிலும் , சென்னையில் முஸ்லீம் வீடுகளில் நடக்கும் விஷேஷங்களிலும் பாட்டுக்கள் பாடுவார் .சென்னையில் என்னுடைய பெரிய பாட்டனார் வீட்டில் கொஞ்ச காலம் தங்கியிருந்தார் .பாட்டொன்று கேட்டேன் .பரவசம் ஆனேன் .நான் அதை பாடவில்லை என்று ஒரு திரை பாடல் ஒன்று உண்டு .அந்த ராகத்தில் ஒரு பாட்டு பாடுவார். அந்த பாட்டு சென்னையில் மிக பிரபல்யம் ஆனது .அந்த பாடல் என் நினைவில் இல்லை .
பேராசிரியர் முஹம்மது யாஸீன்