நெஞ்சம் மறப்பதில்லை.......
கொஞ்ச
நாட்களாக....நான் சின்னஞ்சிறிய வயதில் ஓடியாடிய இடங்களைப் பார்க்கவேண்டும், அங்கே கொஞ்சப்
பொழுதாவது அமர்ந்து வரவேண்டும் என்கிற தவிப்பு அவ்வப்போது மனதுக்குள் வந்து
போகிறது....
அந்த வயதில் எனக்குக் கிடைத்தவாய்ப்புக்கள்., என் பிள்ளைகளுக்குக் கிடைத்துள்ளதா ?என்றால் இல்லை என்றே சொல்வேன்...
பள்ளிக்கூட கோடை விடுமுறைக்காலங்களில் "நம்ம ஆத்தில்"....அதான் பாளையங்கால்வாயில் தண்ணீர் வறண்டு போகும்....அந்த நேரங்களில் காலை 8 மணிக்கு எங்க வாப்பாவுடன் எங்க வீட்டுக்கு அடுத்துள்ள கரையைத்தொட்டு நடந்து கொண்டே "பெரியாத்துக்கு" ப் போவேன்....
அதுக்கு முந்தி "சின்னப்பையனா" இருந்த காலத்தில் எங்க வாப்பும்மாவுடன் போவேன்....
காலில் முள் குத்திவிடக்கூடாது என்பதற்காக, என்னை இடுப்பில் தூக்கிச்சுமந்து, வலது கையில், ஒரு வாளி நிறைய துணிகளை கொண்டு போய் ஆற்றில் துவைத்துக் கடும் சுமையோடு என்னைச் சுமந்து கொண்டுவருவாள்.......
அவ கூட போனால், அங்க இங்க,என்னை நீஞ்ச விட மாட்டாள்....
துணிகளெல்லாம் துவைத்து முடித்துவிட்டு , அவள் குளிக்கும் நேரத்தில் தான், ஆத்தில் என்னை இறக்குவாள்....

அது
வரையும், அடிக்கிற வெய்யில்
என்னை தாக்காமல் இருக்க, அவ போட்டிருந்த துப்பட்டாவால் மூடி,
என்னை ஆத்து மணல் மேட்டில் உட்கார வைப்பாள்..
அந்த துப்பட்டாவில் , அவ தின்னுகிற வெத்திலை, பாக்கு, அங்கு விலாஸ் போயிலை.....மணம்.......இன்னும் என் நாசியில் நிற்கிறது... அடடா....அதை .நான் எங்க போய்ச்சொல்ல?...... மெய்மறந்து போய் இருப்பேன்..
அப்போவெல்லாம் மதகடை ஆத்தின் கரையில், பனை மரங்கள் கணக்கு வழக்கில்லாமல் இருக்கும்..
கோடை வெய்யில் காலங்களில், நுங்கும், பட்டையில் குடிக்க பதநீரும் கிடைக்கும்....அந்த வாசமே தனி தான்....
ஆடி மாசக் .'காத்தடி' நேரத்தில், என்னை அந்த பனை மரங்களின் கீழே, நடத்தி கூட்டிப் போக மாட்டாள்....என்னவாம்? 'பனை மரங்களில் இருந்து மட்டை ..அல்லது ஓலை....கீல மண்டையில விழுந்திரக் கூடாது ..அதுக்காக" என்பாள்.
வயக்காட்டுக்குள் இறங்கி.....போக வைப்பாள்....

அவ
இறப்பதற்கு முந்தி ஒரு வருஷம் வரை,தினமும் ஆத்தில் போய் குளிக்கிற பழக்கத்தை, அவள் விடவே இல்லை...
அவளுக்கு சுகரும் இல்லை....பிரஷரும் வந்ததில்லை....ஒரு மாசம் படுத்தாள்.....மூனு நாளு நாள் தான் அவ ரொம்பச் சிரமப் பட்டாள்...
என் கையோடு அவளின் கை சேர்த்து, .....நான் பிடிச்சிக்கிட்டு இருக்கும் போதே, அவ மூச்சும் அடங்கி நின்னது....
வழக்கமா பெரியாத்துக்கு அவ கூட குளிக்க வந்தால், கொஞ்ச தூரத்துல இருக்கிற ஆல மரத்தைப் பார்க்கக் கூட விட மாட்டாள்.....அதன் கிளைகளின் கோலம்...ஒரு மாதிரி மிரட்டலைக் கொடுக்கும்.....
காரணம் அந்த மரத்துக்கு பக்கத்தில் தான் எங்களோடு, தெருவோடு இணைந்து இருக்கிற, கோனார்கள்,தேவர்கள்,பிள்ளைமார்கள்,ஆசாரிமார்கள்,செட்டியார்களின் சுடுகாடு இருக்கிறது....
அதனால் தப்பித்தவறி கூட அந்தப்பக்கமே என்னைப் போக விட மாட்டாள்

காலத்தின் போக்கால்.... இருபது
வருஷமா......வீட்டில் குளிக்கிற ஆசாமிகள் பட்டியலில் நானும் சேர்ந்து
விட்டேன்...தாமிரபரணி யாரை "இங்க வராதே"ன்னு சொல்லுச்சு?
இப்போ பனைமரங்கள் எதையும் காணோம்....அழகான
வயல் வரப்புகளையும் காணோம்...நத்தம் வழியா போய், தாமிரபரணிக்
கரையில் சுடல மாடன் சாமிக் கோவில் வரைக்கும், கான்க்ரீட் ரோடு
போட்ட புண்ணியத்துல,அது வரைக்கும் மோட்டார் சைக்கிள்ல போக
முடிகிறது....கொஞ்ச தூரம் நடந்தேன்...
இன்னைக்கி...... அந்தப்
பாறையைத் தேடினேன்....அதோ...அங்கே......தெரிந்தது...கொஞ்ச நேரம் அதைப் பார்த்துக்
கொண்டேன்.....தொட்டு தடவிக்கொண்டேன்...
அவ வழக்கமா அங்க தானே.....
சோப்புப் போட்டு என்னை குளிக்க வைப்பாள்...."எம்மா." ...என்று
அழைக்கனும்போல தொண்டை குழியில் சப்தம் வந்தது.... அவளோடு நான் சின்ன வயசில்
பாறையில் அமர்ந்து .....காத்திருந்த காலமெல்லாம் கண்முன்னே வந்து
சென்றது....சோப்பு போடுற அந்தப்பாறையை விட்டு இறங்கினேன்.. ....அதுக்கு மேல என்னால்
அதைத் .தாங்கமுடியவில்லை....என்னை இவ்வளவு தூரம்..... வாழவைக்க முயற்சிகள் பல
செய்த, எங்க
வாப்பாவும்..... மனசெல்லாம் வந்து போனார்கள் ......."எம்மா."...என்றே என்
வாப்பும்மாவை அழைத்தேன்......அப்புறம் வாப்பா....என்றேன்....என்னை
அறியாமல் .அழுதுவிட்டேன்.....அதுவும் சப்தமாக....
.எவ்வளவு நேரம் இதில் போனது என்று தெரியவில்லை....
போயிட்டாங்களே....என்ற
நினைவுதான் மறுபடியும் வந்தது...
கொஞ்ச நேரம் கழித்து
.....தண்ணீரில் இறங்கினேன்....மூழ்கி மூழ்கி எழுந்தேன்...
என் கூட யாரும் இல்லை....
எங்க வாப்பாவும்,......வாப்பும்மாவும்
நான் தண்ணியில் "முங்கும்" போது மீண்டும் என் நினைப்பில் வந்தார்கள்
.......
தண்ணீரில் மூழ்கி
எழுந்ததால் நினைவுகள் ....அமைதியாயின...
தூரத்தில் நண்பர்கள் சிலர்
வந்து கொண்டு இருந்தார்கள்...
நான் இருந்த பாறைப் பக்கம்
வந்து விட்டார்கள்...
என் தலையில் இருந்து
தண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது........என் மூஞ்சியில தண்ணி ஒட்டிக் கொண்டு
இருந்தது.......கொண்டு போய் இருந்த துண்டால்
துடைத்துக் கொண்டேன்....
அந்த பக்கம் வந்தவங்க
போனவங்க எல்லாம்...
."என்ன விஷேசம்....நீங்க இங்க வந்திறிக்கியோ?" .....அப்படீன்னு
விசாரிப்பு வேறு.....சிரிக்க முயற்சித்தேன்....
"இனி அடிக்கடி வர வேண்டியது தான்"...நான்
சொன்னது அவங்க காதில்...விழ வில்லை...
Is there anyone in melapalayam to express the same feelings like Mr.LKS meeran mohideen?
பதிலளிநீக்குநாங்களும் இந்தக் காலத்தில் கூட ஊர் வந்தால் பிள்ளைகளோடு சென்று தாமிரபரணியில் குளிக்கத் தவறுவதில்லை.நாங்க அனுபவித்ததை பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டாமா? வழமையாக கூட்டிச் செல்வதால் தண்ணீரைக் கண்டால் பயம் இல்லை,நீச்சலும் கற்றுக் கொண்டார்கள்.
பதிலளிநீக்குபழைய நினைவுகளை அசை போடும் பொழுது சில நேரம் நேரம் மகிழ்ச்சி. சில நேரம் மனபாரம்..!
தங்களின் ' நெஞ்சம் மறப்பதில்லை ' நினைவுகளைப் படித்ததும் கண்களில் நீர் கோர்த்தது . ஈரப் பதமுள்ள தங்கள் எழுத்து ---- எங்களை நம்மூரில் அந்தந்த இடத்திற்கே அழைத்துச் சென்றது . தங்கள் ஆக்கங்களை யெல்லாம் தொகுத்து --- அதையெல்லாம் புத்தகமாக்குங்கள் சமீபத்தில் . தங்களை --- தங்கள் இல்லத்தில் சந்தித்த நான் --- அப்போது வைத்த அதே கோரிக்கையை மீண்டும் , வைக்கிறேன் ......
பதிலளிநீக்குநம் ஊரைப் பற்றி ---- நம் ஊரின் பழமைப் பற்றி ---
நம்மவர்களின் பழக்க வழக்க பண்பாடுகள் பற்றி ---
நம் ஊரின் தனித் தன்மை ...... இவையெல்லாம் ஆய்ந்து --- ஆராய்ந்து --- தகவல்களை சேகரித்து ----
தொடராகவோ --- புத்தகமாகவோ வெளியிடுங்களேன் ...... ! உங்களால் முடியும் ....!
இறைவன் துணை நிற்பானாக ...... ஆமீன் !!
எல்லாருக்கும் பழைய ஞாபகங்கள் இருக்குது... ஆனால் இப்படி அனுபவங்களை உனர்ச்சி பூர்வமாக நினைக்கவைத்துவிட்டீர்கள் போங்கள் மச்சான்.... யாரும் பார்க்கவில்லை என் கண்களும் ஈரமானதை...
பதிலளிநீக்குஈரமுள்ள நெஞ்சங்களே இதை நினைக்கும்.காங்க்ரீட் காடுகளாகவும்,ரோபோ மனிதர்களாகவும் மாறிப்போன உலகில்,வாப்பும்மாக்களே உலகை வாழவைத்துக் கொண்டுள்ளார்கள்.நிலவு மீண்டும் பூமி வரும்.வாப்பும்மாக்களும் அப்பொழுது வருவார்கள்.காலம் எவ்வளவாகினும் காத்திருப்போம்
பதிலளிநீக்குகதை சொல்லுகிற என்னையே கலங்க வச்சுடீங்க மீரான் பாய்,வார்த்தைகளால் தாமிரபரணியை கண்முன்னே கொண்டுவந்தது பிரமாதம்,,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குFantastic write up... I could feel the "mannin vaasam"...
மலரும் நினைவுகள்... கண்களில் ஏக்கம் தெரிகிறது!
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்,
பதிலளிநீக்குஇன்ஷா அல்லாஹ் உங்கள் பெற்றோர்களுக்கு மறுமையில் அல்லாஹ் சொர்க்கத்தை கொடுப்பானாக
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! 17:24
மாந்த்தோபபு,பனைக்கூட்டம்,வயல்வரப்பு ,ஆற்றுக்கு நடுவே தீவு போன்ற மணல்கூட்டம் மற்றும் நம்மை விட்டு பிரிந்த உறவுகள் எல்லாம்
பதிலளிநீக்குஉருமாறி போனாலும் நம் நினைவுகள் என்றென்றும் நம்முடனே பசுமையாக இருக்கும் அண்ணே.நல்ல பதிவு.
Anna very intresting( migavum alagaga sonnirgal
பதிலளிநீக்குIntha kalathu paiyankalidam mathiyam eanna sapitinka pa eanru keatal yaosikinranka but neenga ungaludiya deenage pona eadamthai eallam ninithuparkinrinka very........very nice anna.old is gold.anna ungala personal life patri sollunga
பதிலளிநீக்குநுகர்வு கலாசாரத்தின் இருண்ட காலத்தில் நாம் எதை எல்லாம்
பதிலளிநீக்குஇளந்துகொண்டு இருக்கிறோம் .
தாங்கள் கூறுவது மரவுடை ஆறு என்று நினைக்கிறேன்.....யானைகிடங்கில் நீந்தி மகிழ்ந்த அந்த காலங்கள் மீண்டும் கிடைக்குமா.***** 80 களின் கால கட்டத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குA memorable recollection... very fluent and touchy
பதிலளிநீக்குMasha allah engalal nan kadandhu vandha kaluri paruvathye ninaika neram ilamal thavikirom neenga ipaum eppavo nadandha tamilli eludhi irukiringa masha allah
பதிலளிநீக்குvery nice its intrsting
பதிலளிநீக்குNenjam Marappathillai. a lot of good old proceedings are hidden in our mind.
பதிலளிநீக்குUngalin Intha Pathiu eanathu Ninaiugalai 40 varudangalukku Munnaal Konduselgirathu. Periyaathil eaththanaiyo Aarugalin Peyargalai Namathu Ooril solvaargal.: Kampi Aaru, Roattaru, Maru odai Aaru.., Innum antha cement road erukkirathu, Antha rottai Namathu Oor Akkaala Piramugar pottathaga kelvipattene. Athanaalthaan rottaru eana alaikkapadugirathaam.please athan kaaranaththai Theriyalaama.
பதிலளிநீக்குஅடுத்த தடவை தாங்கள் .......உங்களின் சிறு பாதம் தடம் சென்ற இடங்களுக்கு செல்லும் போது...அக்கால நண்பர் ஒருவரோடு சென்று வாருங்கள்.... இன்ஷா அல்லாஹ் நீங்கள் மீண்டும் ஓர் இனிய பதிவை இந்த முக நூலுக்கு அதிகப்படியான சந்தோசத்தோடு வெளியிடுவீர்கள்...
பதிலளிநீக்குமலரும் நினைவுகள்,உண்மையில் மனதை திரும்பி பார்க்க வைத்துவிட்டீர்கள்.மனதில் ஒரு ஏக்கம்.மீண்டும் திரும்ப வருமா அந்த நாட்கள்.(அந்த காலங்கள்) அந்த பொன்னான நாட்கள்.
பதிலளிநீக்குEvery word comes from old is always gold. U proved it again and again. Heart touching update. Really super sir.
பதிலளிநீக்குSahul Usmani LKS அண்ணா ! உண்மையிலும் உண்மை எத்தனை அழகான காலங்கள் மறக்கதான் முடியுமா? அந்த வயல் வரப்புகளில் நண்பர்களோடு நடந்து வந்து ,மறு வுடை ஆறு என்று சொல்லக்கூடிய ஆற்றின் முன் கடற்கரைபோன்று காட்சியளித்த அந்த, ஆற்று மணலில் உட்கார்ந்து சீனி வைத்து ஆப்பம் தின்னுகொண்டே எந்த கவலையுமில்லாமல் அரட்டையடித்து விட்டு குளித்த அந்த காலங்கள் ....எங்கே ! தாமிர பரனியின் அந்த ஆற்றையும் காணவில்ல ! அந்த பொண்ணான நண்பர்களின் உறவுகளையும் காணவில்லை ! இது தான் உலகமோ?
பதிலளிநீக்குSyed Buhari என் மகனுடைய தலமுறைக்கு பாளையம் கால்வாய் இப்பொழுது ஏறக்குறைய கழிவு நீர் ஓடை போல் தான் காட்சி அளிக்கின்றது. அவனுக்கு அடுத்த தலமுறைக்காவது நாம் தாமிரபரனியை மாசுபடுத்தாமல் கொடுக்க முயற்ச்சிப்போமே......
பதிலளிநீக்குமலரும் நினைவுகள்... கண்களில் ஏக்கம் தெரிகிறது!
பதிலளிநீக்குpadithu mudithein , kannil kanneerudan , ....... allah ungalukkum ungal kudumpathinarukkum arul purivanaga
பதிலளிநீக்குBack Flash.
பதிலளிநீக்குI am really crying
பதிலளிநீக்குAbu Shafeeq Meeran ORU WRITER URUVAHITTAN LKS KAKKA VADIVIL
பதிலளிநீக்குRealy touching hearts
பதிலளிநீக்குAn impressive "Malarum Ninaivukal"
பதிலளிநீக்குMALARUM NINAIU KALIL NAN MATDUM THAN MOOLKI IRUNTHEAN ENRU NINAITHTIRUNTHEAN !; AANAAL ENNAI BOL INNUM NIRAIYA AATKAL IRUKKIRARGAL ENRU TERINDUGONDEN; VALARGA NINAI GAL !;THANGS !;
பதிலளிநீக்கு23 February at 23:30 · Unlike · 1
நம் பெற்றோருக்கு கிடைத்த ஆனந்தம், நமக்கு கிடைத்ததா...?
பதிலளிநீக்குஇல்லை...!
நமக்கு கிடைத்தவாய்ப்புக்கள், நம் பிள்ளைகளுக்கு கிடைத்துள்ளதா என்றால் இல்லை...
நம் பிள்ளைகள் பெற்ற இன்பம், நம் பேரபிள்ளைகளுக்கு கிடைகுமா...?
சந்தேகம்தான்...!
superb
பதிலளிநீக்குwowww nice feeling
பதிலளிநீக்குNice way to Express the feelings,............
பதிலளிநீக்குs thts moments never comes again....Same feelings...........
பதிலளிநீக்கு//அந்த துப்பட்டாவில் , அவ போடுகிற வெத்திலை, பாக்கு, அங்கு விலாஸ் போயிலை.....மணம்....... அடடா.....நான் எங்க போய் அத ச்சொல்ல?......// அடடா
பதிலளிநீக்குநெஞ்சம் மரப்பதில்லை... அருமை பா...
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை மேலப்பாளையத்தில் பிறந்த அனைவருக்கும் இது போல அனுபவங்கள் உண்டு.ஆனால் இந்த தலைமுறைக்கு வேறு மாதிரி அனுபவங்கள் தான் இருக்கும் .
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை மேலப்பாளையத்தில் பிறந்த அனைவருக்கும் இது போல அனுபவங்கள் உண்டு.ஆனால் இந்த தலைமுறைக்கு வேறு மாதிரி அனுபவங்கள் தான் இருக்கும் .
பதிலளிநீக்குசலாம்,
பதிலளிநீக்குதங்களின் எழுத்து நடை என்னை கட்டிபோட்டது..
கரையினில் தங்கள் வாப்பம்மாவை நினைத்து அழுதது என்னையும் கலங்கடித்துவிட்டது....
Innum niraya eluthungal...aluth theerkka asayaaga ullathu....
என் கண்களில் வெள்ளம்...