பக்கங்கள்

செவ்வாய், 12 நவம்பர், 2019

நெய்யும் தொழிலே செய்யும் தொழில்....

நெய்யும் தொழிலே செய்யும் தொழில்.... என்று வாழ்ந்தவர்கள் மேலப்பாளையத்தைச் சேர்ந்த நெசவாளப் பெருமக்கள்.

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவந்த செய்யும் தொழில் நெசவுத் தொழில் 1977 களோடு அழிந்தே போய்விட்டது.

15க்கும் மேற்பட்ட மாஸ்டர் வீவர்கள் என்று சொல்லப்பட்ட தரகனார்களின்.... அந்த தொழில் 1944 பர்மாவில் ஜப்பான்காரன் போட்ட விமான தாக்குதல் குண்டுகளால் அழிந்தது.

1964இல் இலங்கையில் பண்டாரநாயகா அறிவித்த அறிவிப்பால் அங்கும் வியாபாரம் இல்லாமல் போனது.

64 லிருந்து 70 வரை ஏதோ தாக்குப் பிடித்துக் கொண்டு சில வியாபாரிகள் அங்கே இருந்தார்கள்.

சில வியாபாரிகள் கல்கத்தாவில் தஞ்சம் புகுந்தார்கள். அதையும் தாண்டி சில பேர்கள் சிட்டகாங் வரை தொடர்ந்தார்கள்.

1975-க்குப் பிறகு அண்ணா கூட்டுறவு நெசவாளர் சங்கம் என்று மேலப்பாளையம் RMA. அப்துஸ்ஸமத் அவர்கள் ஏற்பாட்டில் அன்றைய அமைச்சர் நாஞ்சில் மனோகரன் அவர்களுடைய காலத்தில் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசில் ஏற்படுத்தப்பட்டது.

அதற்கு முன்னர் O.846, O.1026 ஆகிய சங்கங்கள் இருந்தன.

இந்த இரு சங்கங்களில் O.846 சங்கம் மட்டுமே ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறுகள் வரை கொஞ்சம் உயிரைப் பிடித்துக் கொண்டு நடந்தது, இயங்கியது.

இன்றைக்கு அந்தச் சங்கம் தொழில் எதுவும் இல்லாமல், நேதாஜி சாலையில் அதன் கட்டிடங்களை வாடகைக்கு கொடுத்து வருகிறது.

சுத்தமாக நெசவுத்தொழில் மேலப்பாளையத்தில் அழிந்தே விட்டது .

கடையநல்லூர் இதுபோல நெசவுத் தொழில் செய்து வந்து, கைகுட்டை நெசவு செய்து வந்தது .
இன்றைக்கு அங்கும் இல்லை.

ஒரு காலத்தில் மேலப்பாளையம் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், தென்காசி, கடையநல்லூர் என்று திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவுத்தொழில் சீரோடும் சிறப்போடும் விளங்கி கொண்டிருந்தது.

அந்தத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான வருவாய் கிடைத்தது.

ஆனாலும் அந்த வருவாயைக் கொண்டு அவர்கள் கண்ணியமாக வாழ்ந்து வந்தார்கள்.

1975-க்குப் பிறகு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் வந்ததால் கைத்தறி தொழிலில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் துபாய் நோக்கி படையெடுத்தார்கள். சவுதி அரேபியா, கத்தார், குவைத் நாடுகளுக்கும் சென்று அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மிகச் சிரமப்பட்டு படிக்கவைத்தார்கள்.

தாயகத்தில் பீடித்தொழில் ஒருபக்கம் பெண்மக்கள் செய்து வந்தார்கள்.

இன்று ஏறத்தாழ பீடித்தொழில் 75% இல்லாமல் போய் 25% மட்டுமே நடந்து வருகின்றது.

நெசவாளர்களும், பீடித் தொழிலாளர்களும் உருவாக்கிய பிள்ளைச் செல்வங்கள் இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளில், மிக உயர்ந்த பதவிகளிலும், நடுத்தர பதவிகளிலும், சாதாரண பதவிகளிலும் இருந்து பொருளீட்டி நாட்டை ஊரை மேலப்பாளையத்தில் புகழை பாது காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரும்பாலும் கைத்தறி வேஷ்டிகள் கட்டுகின்ற கலாச்சாரம், இன்றைக்கு ஊருக்கு ஊர் குறைந்து ,இரவில் தூங்கும்போது கூட ஜீன்ஸ் போட்டு கொண்டு தூங்கும் முஸ்லிம் இளைஞர்கள் பெருத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே கைத்தறி தொடர்பான அதன் ரகங்கள் பற்றி இந்த பதிவை படிக்கும்போது, எங்கள் முன்னோர்கள் செய்து வந்த கைத்தறி வணிகம் பற்றிய நினைவுகளும் என் கண்முன்னே வந்து போனது.
--------------------------------------------------------------------------------------------------------------------------

லுங்கியில் (கைலிகளில்) எத்தனை வகை இருக்கிறது உங்களுக்கு தெரியுமா??

* 60க்கு 40 கொஞ்சம் முரட்டு ரகம் ஜட்டி அணிய தேவையில்லை!

* 60க்கு 60 முரட்டு ரகத்தில் கொஞ்சம் நைஸ்!

* 80க்கு 80 நைசாக இருக்கும் ஜட்டி அவசியம் வேண்டும்!

* 100க்கு 100 அதிக நைஸ் ரகத்தை சேர்ந்தது புது மாப்பிள்ளைகள் கட்டுவது!

*120க்கு 120 பணக்கார வர்க்கம் கட்டுவது விலை அதிகம்!

இதெல்லாம என்ன என்கிறீர்களா? நூலின் தரத்தை வைத்து லுங்கிகள் நெய்யப்படுவது.

நெட்டையாக இருப்பவர்களுக்கென்றே ஒரு வகை கைலி உள்ளது. அதன் பெயர் ரெட்டை மூட்டு கைலி உயரம் அதிகமாக இருக்கும்.
நன்றி: @ Sadayan Sabu

உயரமாக உள்ளவர்களுக்கு இரட்டை மூட்டு கைலி மற்றும் 54 இஞ்ச் கைலி்..

54 இஞ்ச் கைலி இப்போது அதிகம் உற்பத்தி செய்வதில்லை. அப்படியே வந்தாலிம் 80 க்கு 80 மட்டும் தான். அதன் விலையோ இப்போது 975 ரூபாய்..

2 கருத்துகள்:

  1. நெய்யும் தொழிலே செய்யும் தொழில்.. - எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கதர் நெசவு, கைத்தறி நெலவு நலிந்து விட்டது. சாலியர் இன மக்கள் நன்கு படித்து உலகெல்லாம் பணிபுரிகிறார்கள். - உங்கள் பதிவில் நெசவு பற்றி நிறைய தகவல்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு LKS Meeran Mohideen

    பதிலளிநீக்கு
  2. நெய்யும் தொழிலே செய்யும் தொழில்.. - எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கதர் நெசவு, கைத்தறி நெலவு நலிந்து விட்டது. சாலியர் இன மக்கள் நன்கு படித்து உலகெல்லாம் பணிபுரிகிறார்கள். - உங்கள் பதிவில் நெசவு பற்றி நிறைய தகவல்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு LKS Meeran Mohideen

    பதிலளிநீக்கு