இப்ப உள்ள தம்பிமார்கள் கிட்டே போய்....தந்தி ன்னா என்னான்னு ?... ....கேட்டுப்பாருங்க....
முக்காவாசிப் பேருகளுக்கு ,அது என்னான்னு சொல்லத்தெரியாது......
கொஞ்சம் படிச்ச ஆட்கள் அத...டெலகிராம்ன்னு அழுத்தம் திருத்தமா....சொல்லுவாங்க....
கொஞ்சம் படிச்ச ஆட்கள் அத...டெலகிராம்ன்னு அழுத்தம் திருத்தமா....சொல்லுவாங்க....
.கடன் பத்திர விற்பனை....வி.பி.பி....புஸ்தக விற்பனை, சிறுசேமிப்பு, மணியார்டர்ன்னு போய்க்கிட்டு இருந்த போஸ்ட்
ஆபீஸ்ல , புதுசு .....புதுசான புது....யாபாரங்கள்லாம் தபாலாபீஸ்ல...... பார்சல் மூலமா.......செய்றாங்க.....கங்கை நீர் விற்பனை..வரை அங்கே வந்தாச்சு..
இப்போ ....500, 1000 ரூபாய் நோட்டுகளை, செல்லாமல் ஆக்கினதுல புது 2000 ரூபாய் சில்லற மாத்துற வேலையெல்லாம் பண்ணுறாங்க........ஆனா...மக்களுக்கு ஒபயோகமா இருந்த.....தந்திக்கு மத்திய அரசு மூலமா.. மூடு விழா கொடுத்துட்டாங்க ......
இப்போ ....500, 1000 ரூபாய் நோட்டுகளை, செல்லாமல் ஆக்கினதுல புது 2000 ரூபாய் சில்லற மாத்துற வேலையெல்லாம் பண்ணுறாங்க........ஆனா...மக்களுக்கு ஒபயோகமா இருந்த.....தந்திக்கு மத்திய அரசு மூலமா.. மூடு விழா கொடுத்துட்டாங்க ......
கட் கட்....கடா....கட் டட்....என்று தபால் ஆபீஸ்ல ....ஒரு சின்ன
விசைய்ல இருந்து சப்தங்கள் வந்து கொண்டு இருக்கும்....அந்தக்கருவி தருகிற
ஓசையை....உள்வாங்கிக்கொண்டே...அந்த தபாலாபீஸ் போஸ்ட் மாஸ்ட்டர் அல்லது அவருக்கு
இணையானவர் பக்கத்தில் ஒரு தாளில் எழுதி ....யார் விலாசத்திற்கு தந்தி வந்து
இருக்கோ....அவுக வீட்டிற்கு அத அனுப்பி வச்சிருவாக....
போன் இல்லாத....செல் போன் இல்லாத.......காலங்களை இளையதலைமுறை கொஞ்சம் கற்பனை பண்ணிக்கொண்டு பார்க்கணும்...நம்பவே முடியாது...ஊர்ல நாலு அஞ்சு வீட்ல...போன் இருந்ததே பெரிய விஷயம்...
இப்போ செல் இல்லாம யார் இருக்கா.....இளசுகள் முதல் கெளடுகள் வரை ..... வச்சு இருக்குதுக..
“ அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் “....ன்னு.....தந்தி
வாசகங்களைப் பார்த்து தான் சொல்ல ஆரம்பிச்சார்கள்...அந்தக்காலத்து வேலை வாய்ப்பு
உத்திரவுகள் எல்லாம் தந்தியிலும் தபாலிலும் தான் வந்து சேரும்...
உலகத்தின் எந்த மூலையிலும்
தந்தி அனுப்பவும் பெறவும் முடியும்.
கிராமங்களில்....தபால் காரரர்கள் வருகிற நேரம் தாண்டி.....கைகளில் ஏதாவது
தந்தி கொண்டு வந்தார் என்றால்....அது “
எழவு விழுந்ததை கொண்டு வாராம்ல.”.....என்றே நம்பிக் கொண்டு இருந்தார்கள்....
வந்த தந்திய...பிரிச்சி பார்க்கிற வரை... நெல கொள்ளாது... நூத்துக்கு
எம்பது சதமானம்....உசுர் போய்ட்ட செய்திகளைத்தான் தந்தி வாசகங்கள் கொண்டு வரும்.
சில வேளைகளில் ரிப்ளை...டெலிகிராம் மூலம் பணத்தைக் கட்டி தந்தி
கொடுத்தவருக்கே.....பதிலும் அனுப்ப முடிந்தது.
பண்டிகை ,பதவியேற்பு, பிறந்த நாள், மணந்த நாள் வாழ்த்துக்கள்
இறப்புக்கு இரங்கல்,..இப்பிடி பல தரப்பட்ட .... வேலைகளுக்கு தந்தி...என்கிற
டெலக்ராம் ரொம்ப வசதியா இருந்துச்சு.
வக்கீல் ஆபீசுகளில் இருந்து ....உயர் அதிகாரிகளுக்கு உள்ள நிலைமையை
சொல்ல...அனுப்பப்படும் தந்திகளுக்கு....ரண்டு....மூனு நாட்களில் ...பணம் கட்டி நகல
வாங்கிக்கலாம்.. இப்படிலாம் அறிவிச்சோம்....அதல்லாம் மீறி...இப்படி பண்ணிட்டாக
ன்னு சொல்ல தந்தி கொடுத்தத காட்டிக்கலாம்..சாட்சிக்கு தந்தி ரொம்ப ஏதுவா
இருந்துச்சி..
பல அதிகாரிங்கள....சட்டத்தை சொல்லி வரம்புமீறி கடுமையா
போகாம.....நிறுத்தி வச்சது தந்தி தான்னு என்னால் சொல்ல முடியும்....
சட்டப்பூர்வமா....கேப்பதற்கும்,நாசூக்கா மெரட்டுரதற்கும் தந்தி பயன்
பட்டுகிட்டது.
நாம....இங்கன ஒரு தந்தி...படுத்தின பாட்டை ...சொல்லித்தான் ஆகணும்.
அப்போவெல்லாம்...நாங்க....கல்லூரி முடிச்ச நேரம்....
ராத்திரியெல்லாம் முழிப்பு.....பகலில் தூக்கம்ன்னு சொல்ல
முடியாம...ஒரு காலம்.
நானும் என்னோட சேக்காளிகளும் .....ரண்டாம் பிளே...ஆமா....செகண்ட் ஷோ
சினிமா பார்க்கப்போரத வழக்கமா வச்சிருந்தோம்...
ஆனா.... வீட்ல யார்கிட்டயாவது எங்க போறோம் ன்னு சொல்லிட்டுத்தான் போகணும்....
இப்ப உள்ள விழிப்புணர்வு அப்ப ஏது...?
ஆனா.... வீட்ல யார்கிட்டயாவது எங்க போறோம் ன்னு சொல்லிட்டுத்தான் போகணும்....
இப்ப உள்ள விழிப்புணர்வு அப்ப ஏது...?
அப்ப எங்க செட்டில் .....யாருக்கும்
கல்யாணம் ஆகாத பருவம். அதனால திருனவேலி டவுன்,
ஜங்சன் , பாளையங்கோட்டை என்று நள்ளிரவுகள்...தாண்டியும் மோட்டார்சைக்கிளில்
சுற்றுவோம்...மத்த படியான வில்லங்க,விவகாரங்களுக்கெல்லாம் போக மாட்டோம்... .எங்க அண்ணன் புகாரி எப்பவாவது எங்களோடு.வருவான்.....
விடிய..... விடிய திருனவேலி ஜங்க்சனில் பஸ் ஸ்டாண்டை சுற்றி....கடைகள் , டீ ஓட்டல்கள், திறந்திருக்கும்....
விடிய..... விடிய திருனவேலி ஜங்க்சனில் பஸ் ஸ்டாண்டை சுற்றி....கடைகள் , டீ ஓட்டல்கள், திறந்திருக்கும்....
திருனவேலி ஜங்சன் பழைய பஸ் ஸ்டாண்டில் அப்போ , அரசன்
பேக்கரி.....ஐஸ்கிரீம் கடை ரொம்ப பிரபலம்....ராத்திரிவேளைகளில் , நல்ல டீ
குடிக்கனும்ன்னா...அங்க தான் போகணும்...
பசி எடுத்தா....கேக்கு, பண்ணு, வட்டரொட்டி, தேங்காப்பூ ரொட்டி , சாக்குலேட், பிஸ்கட் ,பப்ஸ் எந்த நேரத்திலும் திங்கலாம்.
ஒரு நாள் நாடு ராத்திரி தாண்டி ஒரு ரண்டு மணி இருக்கும்...நானும் அண்ணனும் அங்கே.....எதோ பசிக்கு தின்று விட்டு....சூடான டீயை உரிந்து குடிச்சுகிட்டு இருந்தோம்......
பசி எடுத்தா....கேக்கு, பண்ணு, வட்டரொட்டி, தேங்காப்பூ ரொட்டி , சாக்குலேட், பிஸ்கட் ,பப்ஸ் எந்த நேரத்திலும் திங்கலாம்.
ஒரு நாள் நாடு ராத்திரி தாண்டி ஒரு ரண்டு மணி இருக்கும்...நானும் அண்ணனும் அங்கே.....எதோ பசிக்கு தின்று விட்டு....சூடான டீயை உரிந்து குடிச்சுகிட்டு இருந்தோம்......
இப்ப உள்ள மாதிரி ...ஒன் வே...டூ வே கதையெல்லாம் அப்போ
கிடையாது...அந்த நள்ளிரவு தாண்டியும்...வெளக்குகளாலே ஊரே....வெளிச்சமா இருந்தது.
நாங்கள் அம்பேத்கர் சிலை பக்கம் நின்று...கொண்டு இருந்தோம்.
எங்கள் பக்கத்தில் ஒரு லாரி வந்து நின்றது....அதன் முன்புறம் இடது
பக்கத்தில் இருந்து ஒருவர்...வேகவேகமாக.. குதித்தார்...அவர் எங்கள் இருவருக்கும் ....சொந்தக்காரர் .. ..அரசுப்பணியில் இருந்தார்.
என்ன...----இவர் லாரில வந்து குதிக்காறேன்னு..ஒன்னு போல
...நாங்களே.......கேட்டுக்கிட்டோம் ...வந்து இறங்கியவர் பதட்டமாக
இருந்தார்...அதோடு எங்கள் இருவரையும் பக்கத்திலேயே பார்த்துவிட்டார்....
“ எப்பா....எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ?.....”
“ எங்க பெரியப்பா.....நல்லா இருக்கானா ?....”
“ சின்னப்பா...நல்லா இருக்கானா ?....”
“ அந்தப்பிள்ள....நல்லா இருக்காப்பா..?...” என்று படபடப்பாகக்
கேட்டுக் கொண்டார்....
“ அந்தப்பிள்ளை “ என்பது....அவரது 25 வயது
மகன் வயதைக் கொண்ட இரண்டாம் மனைவி...
நாங்கள் இருவரும்....” உங்க வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்க..”.என்று
எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னோம்...
“ ஆமாப்பா.....நீங்க ஊர்ல இருந்து எப்ப பொறப்பட்டீங்க...?” என்று ஆவல்
மேலிட கேட்டார்...
“ நாங்க...ஒரு பத்து மணிக்கு கிளம்பியிருப்போம்....சரி...எங்க இருந்து
இந்த லாரில வாறீங்க?...இன்னைக்கு பஸ் ஒடல்லியே?...” அண்ணன் கேட்டான்.
“ நான் விழுப்புரம் பக்கம்...ஒரு கிராமத்தில் இருந்து ரண்டு மூனு
இடத்தில் ...லாரி லாரியா மாரி....காலைல ஏழு மணிக்குப் புறப்பட்டவன்...இப்ப தான் வந்து சேருறேன்....”என்றார்
அவர்.
நாங்க வாங்கிக் கொடுத்த கேக்..துண்டுகளைக் கூட வேண்டான்னு சொல்லிட்டு
சுடச்சுட கொடுத்த டீயை ....கடகடன்னு குடிச்சு முடிச்சார்.
நாங்க சொன்ன எதையும் நம்புகிற மனப்பக்குவத்தில் அவர் இல்லை....நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு
இருந்தார்..” போதுமப்பா...கிளம்புங்கப்பா “என்று சொல்லிவிட்டு அந்த அகால வேளையில்
...எங்களோடு மோட்டார் சைக்கிளில் மூன்றாவது ஆளாக அமர்ந்து கொண்டார்...
“ என்ன...இவர் ஏன் இப்படி துடிக்கிறார்?....ஒன்னையும் சொல்லித்தொலைக்க
மாட்டேங்கிறாரே...? என்னவோ?....ஏதோ?...”....என்று
பல்வேறு வில்லங்கமான யோசனைகள் மனதில் விதவிதமாக வந்து போக........ நான் பைக்
ஒட்டிக்கொண்டு இருந்தேன்....
எங்கள் வீட்டின் பக்கத்து தெருவில்
தான் அவரும் குடியிருந்தார்...
நாங்கள் அந்த மோட்டார் சைக்கிளில் அவரோடு நாங்கள்...நுழையும்
போது....அந்த தெரு அமைதியாக இருந்தது....
அவர் வீட்டு முன்னர் போய் இறங்கினோம்...
“ ஏய்....யார்ரா இருக்காங்க.....கதவத்திறங்க...”.என்று சொல்லிக்கொண்டே....படபடவென்று....அவரது வீட்டின்
கதவைத்தட்டினார்...
கொஞ்சம் மெதுவாக....அவரது மனைவி வந்து கதவைத்திறந்தாள்.
கதவைத் திறக்க அவர் போட்ட..கூப்பாட்டில் ....அடுத்த வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டு
இருந்த ஒருவரும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்....நாங்கள் நான்கு பேரும் உள்ளே
நுழைந்தோம்...
அவரது மூத்த மனைவிக்கு பிறந்த பெரிய மகன், மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துகொண்டு இருந்தான்....
முன் வீட்டில், இரண்டு குழந்தைகள்....பாயின் மீது, தூங்கிக் கொண்டிருந்தன. அவர் மனைவியும்....அவசர அவசரமாக கண்களை இடுக்கி .....முழித்துக்
கொண்டு ....தூக்கக் கலக்கத்தில் இருந்தாள்....
தன கைகளில் இருந்த பெட்டியை கீழே எறிந்து விட்டு....
” இந்தத் தந்திய....எனக்கு கொடுத்தது...... யாருலே...?”....என்று கடும்
குரலில் கோபம் கொப்பளிக்க ஒரு சவுண்ட் கொடுத்தார்.அது அக்கம்பக்கம் பத்து
வீடுகளுக்காவது கேட்டு இருக்கும்....
அப்போது தான் நானும் அண்ணனும் அவர் கையைக் கவனித்தோம்....ஒரு தந்தி
இருந்தது...எந்த பாக்கட்டில் அந்தத் தந்திய வச்சு இருந்தாரோ தெரியல்லை.....
கொஞ்ச நேரத்தில்...எங்கள் கண் முன்னே...அவரது மூத்த மகனையும் , இளம்
மனைவியையும்...மனுஷன் துவச்சு எடுத்திட்டார்...
அவரைத்தடுத்து நிறுத்த நாங்களும்..... பக்கத்து வீட்டு திண்ணையில்
படுத்து கிடந்து..... எழுந்து வந்த ஆசாமியும்...போட்ட கூச்சலில் ...அக்கம் பக்கத்து
வீடுகளில் இருந்து ,....அந்த அர்த்த ஜாமப் பொழுதில் .......இன்னும் சில பேர்கள்
வந்து சேர்ந்தார்கள்....
“ ஏல...நான்
கேக்கிரம்ல.....இந்த தந்திய எனக்கு கொடுத்தவம்....எவம்ல?...”அவருடைய குரலில்
ஆவேசம் வெளிப்பட்டது..அங்கிருந்த யாரும் பதில் சொல்லவில்லை...
பக்கத்து வீட்டு திண்ணை ஆசாமி....கொஞ்சம் தைரியத்தை
வரவழைச்சுக்கிட்டு.....” நாந்தாங் கொடுத்தேன்...இங்க ஒங்க ஊட்ல...நீங்க ஊருக்கு போன நாளாயில் இருந்து...ஒங்க மகனுக்கும் , இந்தப்புள்ளைக்கும் ஒரே தக்கம்,.தகராறு தான்...
உங்களை உடனடியா.....வரவழைக்கணும்...எப்படியாது ...அவசரமா.....கொடுன்னு இந்தப்பிள்ளை தான் தந்தி கொடுக்கச்சொல்லுச்சு....அதனால் நான் தான் வாசகம் அமைச்சு..... கொடுத்தேன் “.... என்றான்....
மனுஷன் அந்த ஆசாமியின் கழுத்தை சுற்றிப் போட்டு இருந்த மேல் துண்டை
முறுக்கிகொண்டு .....இழுத்துக் கொண்டு.... “ ஏல நீயால....இப்படி ஒரு தந்தியக்
கொடுத்தே...இதுக்கு என்ன அர்த்தம்னாவது ஒனக்குத் தெரியுமாலே.... ? ..”என்றார்
ஆத்திரத்தோடு..
ஐயோ....இந்த ஆள இப்படியே அவர் கைகளில் கொடுத்தால்....சங்கு நெரிஞ்சு
செத்துடுவான் போல இருக்கேன்னு.....அவனை விடுவித்தோம்....அடுத்த வீட்டு
ஆசாமி...மேல்மூச்சு...கீழ மூச்சு வாங்க....இருமலோடு அமைதியானான்...
“ நான் தந்தி
கொடுத்தது...தப்பாங்க?...”..என்று என்னிடம் கேட்டுக் கொண்டான்....
அவர் கைகளில் இருந்த தந்தி வாசகங்களைப் பார்த்தேன்....இவன்
எழுதிக்கொடுத்த தந்திய அந்த போஸ்ட் மாஸ்ட்டர் எப்படி ...ஒத்துக்கிட்டு வாங்கி
அனுப்பினாரோ?......வந்த சிரிப்பை....அடக்கிக் கொண்டு ....ஓடியே வந்து விட்டோம் ..
தந்தி வாசகம் இது தான்..
START……SERIOUS….OUT..